சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இன்று ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக அறிவித்தார். அதன் பிறகு ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆளுநரின் கருத்துகள் தொடர்பான விஷயங்களில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆனால் ஆளுநர் என்ற பதவி மீது முதல்வர் மதிப்பு வைத்துள்ளார். எனவே கவர்னர் பதவிக்கு மதிப்பு கொடுக்கும் விதத்தில் முதல்வர் அந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறினார். மேலும் முன்னதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.