கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநரை வெளியே போ என கூறிய பொன்முடி, இன்று நடந்த நடப்பாண்டின் முதல் பேரவை கூட்டத்திற்கு வரவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து அவர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடருவதாக செய்தி வெளியானது. இந்நிலையில், அமைச்சரவை லிஸ்டில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.