அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி வாகை சூடிய நிலையில் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கிறார். இந்நிலையில் தற்போது ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்பதால் துணை அதிபர் குறித்த அறிவிப்பும் வெளிவந்துள்ளது. அதன்படி இந்திய வம்சாவளி பெண்ணான உஷா வான்ஸ் அவருடைய கணவர் ஜேடி வான்ஸ் துணை அதிபராக பொறுப்பேற்கிறார்.
இவர் அரசியலில் வெற்றி பெற்றது போன்று பொருளாதார வலிமையிலும் மீண்டும் அமெரிக்கா வெற்றி பெறும் என்றும் அமெரிக்கர்களின் கனவுகள் ஒவ்வொன்றும் நனவாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இவருடைய வெற்றிக்காக உஷாவின் சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள கோதாவரியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.