தாய்லாந்து செல்லும் இந்திய பயணிகள் முன்போ அல்லது தாய்லாந்தில் இறங்கிய பிறகும் விசா பெற வேண்டிய அவசியம் இல்லை. இந்த சலுகை நவம்பர் 11ம் தேதி முடிவடையவதாக இருந்த நிலையில், தாய்லாந்து அரசு தற்போது அதனை காலவரம்பின்றி நீடித்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் நீண்ட நாட்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கலாம். புதிய விதிமுறைகளின் படி இந்தியர்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை தங்கி தங்கலாம் என்று அனுமதிக்கப்படுகிறது.
உள்ளூரில் இருக்கின்ற இமிகிரேஷன் ஆபீஸில் விண்ணப்பித்து 30 நாட்களுக்கு உங்களுடைய வரவை எக்ஸ்டெண்ட் செய்து கொள்ளலாம். இதனால் இந்தியர்கள், தாய்லாந்துக்கு சுற்றுலா செல்வது மிகவும் எளிதாக மாறி உள்ளது. இதன் காரணமாக தாய்லாந்துக்கு செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வரத்து 16.17 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. அதோடு வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி தாய்லாந்துக்குச் செல்லும் இந்தியர்களும் அதிகரித்துள்ளனர்.