ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்த நிலையில் அந்த கட்சியின் பிரமுகரான செந்தில் முருகன் என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

இதன் காரணமாக கட்சி விதிகளுக்கு மீறி அவர் செயல்பட்டதாக கருதி அவரை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து நீக்கினார். இதைத் தொடர்ந்து அவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து செந்தில் முருகன் நீக்கப்பட்ட நிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார். மேலும் அவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கட்சியின் வேட்பாளர் விசி சந்திரகுமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.