
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சதி செய்த பாஜகவின் மலிவான போக்கை கண்டுக்கிறோம். ராகுல் காந்தி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூடாது என்பதற்காகவே நீதிமன்றத்தை பயன்படுத்தி அவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளனர். இது போன்ற குற்றம் செயல்களை சங் பரிவாரங்களை தான் அம்பலப்படுத்தும். இந்திய மக்களுக்காக அவர்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற தலைவர்களும் ராகுல் காந்தியின் சிறை தண்டனைக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
On behalf of #VCK we strongly condemn the cheap attitude of BJP that made a conspiracy against @RahulGandhi not to contest in forthcoming election by using the court. This kind of criminal activities will expose the Sangh parivars only. People of India will teach them in time. pic.twitter.com/s5EO1HsBYa
— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 23, 2023