
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, இன்னைக்கு மனோ தங்கராஜ் உடைய ஒரு முக்கியமான எண்ணம் என்னன்னா…. ஆவின் குடிநீரை கொடுக்க போறேன். தமிழகத்துல மொத்தமாக உற்பத்தி ஆகிறன்ற பால் 244 லட்ச லிட்டர் தமிழ்நாட்டுல மொத்தமா பால் உற்பத்தி ஆகுது. ஆவின் நிறுவனம் அதுல வாங்குவது வெறும் 34 லட்ச லிட்டர்.
மொத்தமா தமிழ்நாட்டினுடைய பால் உற்பத்தி 244 லட்ச லிட்டர்ல, ஆவின் வாங்குவது வெறும் 34 லட்ச லிட்டர். அங்கேயே ஒன்னையும் காணோம். எதுக்கு உங்களுக்கு குடிநீர். இவர்கள் குடிநீர் ஆரம்பிப்பதற்கான நோக்கமே… திமுகவின் உடைய முதல் குடும்பமே அவர்கள் நடத்துகின்ற ஸ்ப்ரிங் மினரல் வாட்டரை நமக்கு தள்ள வேண்டும் என்பதற்காக ஆவின் அவர்கள் குடிநீர் சேவையை ஆரம்பிப்பதற்காக கிளம்பி இருக்கிறார்.
நான் ஏற்கனவே சொன்னேன். சில பேர்த்த கடல்ல தூக்கி போட்டாலும் மேல தான் வருவாங்க. உள்ள போக மாட்டாங்க. இருந்தாலும் அவருடைய சாதனையே பட்டியலிடுவது என்னுடைய கடமையாக இருக்கிறது.
கொரோனா காலகட்டத்தில் ஒரு வீடியோ கான்பிரன்ஸ் வச்சாரு. வீடியோ கான்ஃபரன்ஸ்னா எவ்வளவுங்க? ஒரு கம்ப்யூட்டர், ஒரு டிவி, அந்த பக்கம் ஒரு பத்து பேர் இருப்பாங்க. இந்த ஒரு பத்து பக்கம் பேர் இருப்பாங்க. வீடியோ கான்பரன்ஸ் நடக்கு. எவ்வளவு செலவாவுங்க? ராஜா எவ்வளவு செலவாகும் பிரதர். ஒரு வீடியோ கான்பரன்ஸ் எவ்வளவு செலவாகும்.
பாரதிய ஜனதா கட்சி என்றால் செலவே ஆகாது. ஒருவேளை திமுக -னா அந்த 10 பேருக்கு காபி, டீ, போண்டா எல்லாம் கொடுக்கணும். இரண்டு கோடியே 52 லட்சம் ரூபாய் கணக்கு காட்டி இருக்கார். கொரோனா காலகட்டத்தில் நடந்த வீடியோ கான்பரன்ஸ் _சுக்கு அந்த அமைச்சருடைய பெருமையை பாருங்க.
அமைச்சரை ஆவினுக்கு மாத்துனாங்க… எங்கிட்ட குழந்தை தொழிலாளரே இல்லை என்கிறார்ங்க. குழந்தை தொழிலாளர் வெளிய வந்து… அண்ணே எங்களை பார்த்தா குழந்தை மாதிரி தெரிலையா, நாங்க எல்லாம் உள்ள தானே இருக்கோம் அப்படின்னு சொல்லுறாங்க. தமிழகத்துல அந்த காமெடி ஒரு வாரம் ஓடுச்சு… ஒரு வாரம் ஓடுச்சு… குழந்தை வந்து சொல்லுது… அண்ணே நான் குழந்தைன்னு.. இல்ல, இல்லப்பா நீ குழந்தை இல்ல, குழந்தை தொழிலாளர் இல்லை என்று சொல்லுவது போன்ற ஒரு அமைச்சர்.
அப்புறம் அப்பப்ப பாரதிய ஜனதா கட்சிக்கு கோவம் வந்துருச்சுன்னா… குமரி மண்ணுக்குள்ள வர மாட்டாரு. சென்னையிலே இருந்துக்குவாரு. கோபம் எல்லாம் குறைந்த பிறகு, இந்த மண்ணிற்கு வந்து வீர வசனம் எல்லாம் பேசுவாரு. இருந்தாலும் அவருடைய பெருமையாக உங்களுக்கு கிடைத்த மந்திரி…. எந்த வேலையும் செய்யாத மாதிரியாக இருக்கின்ற காரணத்துனால, எம்.பி_யை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்க எடுக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது சகோதர சகோதரிகளே என தெரிவித்தார்.