செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஆளுநர் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு அழகு. இருவருமே அரசியல் சாசன பொறுப்பில் இருப்பவர்கள். முதலமைச்சர் அவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்.

அனால் முதலமைச்சர் அவர்கள் என்ன சொல்கிறாரோ ? அதை செயல்படுத்துவது ஆளுநரின் கடமை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிகாரம் உள்ள முதலமைச்சர். இதில் ஈகோ இருக்க கூடாது. அரசியல் நிச்சயமாக இருக்கக் கூடாது. ஆளுநர் அவர்கள் பிஜேபி சார்ந்தவராக இருக்கலாம்.  அதை அவர் தனிப்பட்ட கருத்தாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆளுநராக இருப்பவர் அவரை சார்ந்த….  கட்சியை சார்ந்த கருத்தை வெளியில் சொல்லக்கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும். ஆளுநர் என்பது நீதிபதிகளை போல…  ஏதாவது நீதிபதிகள் அரசியல் கட்சியை சார்ந்த கருத்துக்களை சொல்லி இருக்கிறார்களா ? இல்லை.

அதேபோல தான் ஆளுநரும். இப்போ ஜனாதிபதி அவர்கள் அரசியல் கருத்தை சொல்லி இருக்கிறார்களா ? இல்லைல. அந்த நிலைப்பாடு ஆளுநர் எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த கட்சி சரி இல்லை,  அந்த கொள்கையை கொண்டு வர வேண்டும்.. அதெல்லாம் கருத்து கிடையாது. அவர் வந்து நடுநிலையா செயல்படனும்.  தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு செயல்படனும்.  ஏனென்றால் தமிழ்நாட்டில் என்னென்ன இருக்கோ…  தப்பு நடந்தால் நிச்சயமாக தட்டிக் கேட்கலாம்,  அது தப்பு கிடையாது. அதற்கு ஒருமுறை இருக்கு என தெரிவித்துள்ளார்.