கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி அரசு பள்ளிக்கூடம் பகுதியில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரோகன்(9) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு மணல் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ரோகனின் வீட்டிற்கு அவரது நண்பர் சென்றுள்ளார். அவர் தான் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு தன்னுடன் உடையார்விளைக்கு வருமாறு அழைத்தார்.

இதனால் புதிய மோட்டார் சைக்கிளில் ரோகனின் நண்பர் முன்னால் சென்றார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் ரோகனும், அவரது உறவினர் அஸ்வின்(19) என்பவரும் உடையார்விளை நோக்கி புறப்பட்டனர். இந்நிலையில் லட்சுமிபுரம் சந்திப்பு பகுதியில் சென்ற போது ரோகனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானது. அவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக ரோகன் மோட்டார் சைக்கிளை சாலையோரம் திருப்பினார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஓடையில் பாய்ந்து ரோகன் பரிதாபமாக உயிரிழந்தார். அஸ்வின் இடது கையில் முறிவு ஏற்பட்டது. இந்நிலையில் அடம்பிடித்து வாங்கிய மோட்டார் சைக்கிள் ரோகனின் உயிரைப் பறித்த தகவல் வெளியாகியது. அதாவது கடந்த 2 ஆண்டுகளாக விலை உயர்ந்த அதிநவீன மோட்டார் சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என பெற்றோரிடம் ரோகன் அடம்பிடித்து நான்கு நாட்கள் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்ததாக தெரிகிறது.

முதலில் மறுப்பு தெரிவித்த பெற்றோர் ஒரு கட்டத்தில் தங்களது மகன் அடம் பிடிப்பதால் சில நாட்களுக்கு முன்புதான் விலை உயர்ந்த அதிநவீன மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற போது தான் ரோகன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளும் சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.