தெலுங்கானா மாநிலம் பெங்களூரை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஐயப்பா. இவர் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தும் தனது தாயிடம் கல்லூரிக்கு செல்வதற்கு தனக்கு பைக் வாங்கி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆறு வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்து குடும்பத்திற்காக வீட்டு வேலை செய்து வரும் ஐயப்பாவின் தாய் சிறிது நாட்கள் பொறுத்திருக்குமாறு மகனிடம் கூறியுள்ளார்.

பைக் வாங்குவதற்காக சுமார் ரூ.50,000 தாய் தயார் செய்து விட்டார். ஆனால் இது ஐயப்பாவிற்கு தெரியாது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஐயப்பா தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.