பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பலமுறை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அழைப்பை தான் ஏன் நிராகரித்தேன் என்பது குறித்து பேசிய சுனிதா, “நான் பணத்திற்காக எதையும் செய்ய மாட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ அல்ல, அது ஒரு கேம் ஷோ. அங்கு மக்கள் தங்கள் உண்மையான தன்மையை காட்ட மாட்டார்கள். அவர்கள் வெறும் கேம் விளையாடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஷாருக்கான் மனைவியிடம் இந்த கேள்வியை கேட்பார்களா? நாங்கள் ஒன்றும் பணத்துக்கு கஷ்டப்படுவதில்லை. எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஆர்வமும் இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார். சுனிதாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரது தைரியமான முடிவை பாராட்டினாலும், சிலர் அவரை விமர்சிக்கின்றனர்.