ஜூன்1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்காலிகமாக ஒத்துவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சற்றுமுன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளை திறக்க 2 தேதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பிறகு எந்த தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.