தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தை சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்த திட்டத்தை கடந்த 15ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உணவு வகைகளை அரசு முன்னதாகவே பட்டியலிட்டு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அறிவித்தது போல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு உடனடியாக காலை உணவு வழங்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மாணவர் சேர்க்கை பணிகள் காரணமாக இந்த திட்டம் தாமதமாகி வருவதாகவும், சேர்க்கைக்கு பின் முறையாக கணக்கெடுப்புகள் நடத்தி காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல் இந்த திட்டம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.