
தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன.,31 கடைசி நாளாகும். 2.67 கோடி நுகர்வோரில் இதுவரை 2.20 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர்.
இதற்கான அவகாசம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது. இந்நிலையில், ஆதாரை இணைக்காமல் இருப்போர், பிப்., முதல் ஆதார் இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என மின் வாரியம் எச்சரித்துள்ளது.