இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மத்திய அரசின் PIP FactCheck சில இணைய குற்றவாளிகள் மொபைல் பயனர்களை ஏமாற்றுவதற்காக போலியான செய்திகளை அனுப்பியது தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசின் இலவச மொபைல் ரீசார்ஜ் திட்டத்தில் அனைத்து மொபைல் பயனர்களும் 28 நாட்களுக்கு இலவச பேலன்ஸ் வழங்குவதாக வாட்ஸ் அப் குழுக்களில் செய்தி வருகின்றது. இந்தச் செய்தி முற்றிலும் பொய் என PIBFactCheck தெரிவித்துள்ளது. எனவே இது போன்ற செய்திகளை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.