இந்தியாவில் மாரடைப்பினால் 28.1 பேர் மரணம் அடைவதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தில் எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டிருப்பதாவது, ஐசிஎம்ஆர் வழங்கியுள்ள ஆய்வறிக்கையின்படி இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் மாரடைப்பினால் மட்டுமே 28.1% பேர் மரணம் அடைகிறார்கள்.

கடந்த 1990’களில் மாரடைப்பினால் நிகழ்ந்த மரணம் 15.2 சதவீதமாக இருந்த நிலையில்,  2023-ம் ஆண்டு 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில் புகைபிடிப்பவர்களில் 32.8 பேர், மது குடிப்பவர்களில் 15.9 சதவீதம் பேர், உடலுழைப்பு இல்லாதவர்களின் 41.3 பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர். மேலும் இந்தியாவில் 30 வயது முதல் 60 வயது உட்பட்டவர்களுக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.