ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்  பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க 2023 மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல் உங்கள் பான் கார்டு வேலை செய்யாது. ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண்களை அடுத்த நிதியாண்டு முதல் பயன்படுத்தக் கூடாது என தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.