
கேரள மாநிலத்தில் இரண்டு பேருக்கு குரங்கம்மைத் தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவில் உள்ள கண்ணூருக்கு வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கண்ணூரில் அவர்களுக்கு குரங்கம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு பரிகாரம் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச்செய்தி அறிந்த கேரளா சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது, இருவருக்கும் கூடுதல் தனி அறைகளை அமைத்து தொடர்ந்த அவர்களது உடல் நிலைமையை கண்காணிக்க விரைவு பொறுப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நோயாளிகளுடன் தொடர்பிலிருந்து நபர்கள், அவர்களது உறவினர்களுக்கு யாருக்காவது குரங்கம்மை நோய் தொற்றின் அறிகுறி இருக்கிறதா? என கண்டறிய சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். இதேபோன்று நோயாளிகள் இருவரும் வெளிநாட்டிலிருந்து எந்த வழியாக கேரளாவை வந்தன இந்தனர் என்ற வழிகாட்டு படமும் வெளியிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.