தாம்பரம் அருகே குழந்தைகளுக்காக தொடங்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கு  பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை  பெற்றுள்ளது. 

நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு குழந்தைகளிடையேயும் கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வம் குழந்தைகளிடம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதை பெற்றோர்களும் பெரிதாக விரும்புவதில்லை.

இதற்குக் காரணமாக குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அதீத வெப்பநிலையை காரணமாக கூறுகிறார்கள். இந்நிலையில் தாம்பரம் படப்பை அருகில் குளிரூட்டப்பட்ட உள் விளையாட்டு அரங்கமானது குழந்தைகளுக்காக கட்டப்பட்டு பயன்பாட்டில் விடப்பட்டுள்ளது. இதனை குழந்தை நட்சத்திரமான ஆழியா என்பவர் தொடங்கி வைத்துள்ளார்.  இந்த உள்விளையாட்டு அரங்கம் பாதுகாப்பானதாகவும், குழந்தைகளை  கவரும் விதமாகவும், ஆரோக்கியமாக அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதற்கு வசதியாகவும் இருப்பதால் பெற்றோர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.