திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மாணவர்களால் உருவான இயக்கம். அதனால் தான் திமுக கழகத்தின் எந்த முக்கிய நிகழ்வை எடுத்து பார்த்தாலும் அதில் மாணவர்களுடைய பங்களிப்பு இருக்கும். இப்போது முத்தமிழர் கலைஞருடைய நூற்றாண்டில் இருக்கின்றோம். கலைஞருடைய நூற்றாண்டை நம்முடைய தலைவர் அவர்கள் அரசின் சார்பாகவும்,

கழகத்தின் சார்பாகவும் இந்த ஒரு வருடம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த கொண்டாட்டத்தில் மக்களுக்கு நலத்திட்ட பணிகள் செய்யணும் அப்படிங்கறதுதான் நம்முடைய தலைவருடைய கட்டளை.கழகத் தலைவருடைய அறிவுறுத்தலையின் பேரில் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பொறுப்பு கொடுக்கப்பட்டது.

அதுவும் சிறப்பாக நிகழ்ச்சி. இளைஞர் அணிக்கு பாத்தீங்கன்னா, 100  சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஒரு கலைஞர் நூற்றாண்டு படிப்பகம் திறக்க வேண்டும். அதேபோல தமிழ்நாட்டில இருக்க கூடிய,

அனைத்து மாவட்டங்களிலும் மாரத்தான் போட்டி நடத்த வேண்டும் என்று இளைஞர் அணிக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதேபோல ஒவ்வொரு மாவட்ட கழகத்திற்கும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டது. அப்படி நம்முடைய சிற்றரசு அவர்கள் கலைஞருடைய நூற்றாண்டுக்காக இந்த சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு இந்த நேரத்தில் மீண்டும் வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.