
தென்காசி மாவட்டத்தில் உள்ள காசி மேஜர் புரம் பகுதியில் குத்தாலிங்கம் என்ற 32 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் மதியம் தன் மனைவியுடன் ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் நான்கு பேர் அரிவாளுடன் அங்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரின் மனைவியின் கண் முன்னே அவரை வெட்டி படுகொலை செய்த நிலையில் பின்னர் தலையை மட்டும் துண்டித்து காசிமேஜர் புரம் அம்மன் கோவிலில் கொண்டு வைத்து விட்டனர். இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் குத்தாலிங்கத்தின் தம்பி ஒருவரை கொலை செய்துள்ளார். இதனால் அந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தம்பியை பழிவாங்க அண்ணனை கொலை செய்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டவரின் தலை மற்றும் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில் காசி மேஜர் புரம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று உள்ளது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ரமேஷ்(25), மணி என்ற புறாமணி(24), செண்பகம்(40), ஹரிஹரசுதன்(24) ஆகிய 4 பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.