தமிழக அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வானது கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட நியமன தேர்வானது 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த தேர்வுக்கு ஜனவரி 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் பிஇ முடித்து பிஎட் கல்வி தொகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பேசிய ஆசிரிய தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், தமிழக அரசானது கடந்த 2018 ஆம் வருடம் பிஇ பட்டதாரிகளும் கணிதம், இயற்பியல் ஆசிரியர்களாக நியமிக்கப்படலாம் என அறிவித்தது. இதனை கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் நடக்க இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில்  பிஇ பட்டதாரிகளும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.