பாம்பன் கடலின் நடுவே கிட்டத்தட்ட 535 கோடி ரூபாய் செலவில் 2.7 கிலோமீட்டர் தூரத்தில் புதிய ரயில் பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் லிப்ட் வடிவில் தூக்கு பாலம் பொருத்தும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாம்பன் துறைமுக அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது பாம்பன் கடலுக்கு நடுவே நவம்பர் 19ஆம் தேதி முதல் தூக்கு பாலம் பகுதிகளில் இரும்பு உருளை அமைக்கும் பணிகள் நடைபெறும் எனவும் இதனால் பாதுகாப்பு கருதி நவம்பர் 10ஆம் தேதி முதல் பாம்பன் பாலத்தை கடந்து  படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .அதாவது இந்த கட்டுமான பணிகள் முடிவடையும் வரை நவம்பர் 10 முதல் ஜனவரி 31 வரை பழைய ரயில் பாலத்தை படகுகள் மற்றும் கப்பல்கள் கடந்து செல்ல முடியாது என்று அறிவிக்கப்பட்டது.