
கிரிக்கெட் உலகில், பிறந்தநாள் என்பது ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு பெரும்பாலும் மற்ற நாட்களை விட சிறப்பான சந்தர்ப்ப நாளாக தோன்றக்கூடும். ஆனால் பிறந்தநாளில் ஒரு சதத்தை எட்டுவது என்பது அசாதாரண சாதனையாகும். இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது தனது பிறந்தநாளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தற்போது விராட் கோலி பெற்றுள்ளார்.
2011 ஆம் ஆண்டில், இந்தியா உலகக் கோப்பையை நடத்தியபோது, கோலி தனது 23 வது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர் தற்போது தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், இதற்கிடையில் பல சதங்களை அவர் அடித்த போதிலும், இந்த சதம் அவரது அபாரமான திறமை மற்றும் அசைக்க முடியாத உறுதிக்கு சான்றாக மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்து பலரது பாராட்டுகளை விராட்கோலி தற்போது பெற்று வருகிறார். அதே போல் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சனத் ஜெயசூர்யா, ராஸ் டெய்லர், டாம் லாதம் மற்றும் மிட்செல் மார்ஷ் போன்ற பிற ஜாம்பவான்களும் தங்கள் பிறந்தநாளில் சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.