
நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் 3-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அவர் 3-வது முறை பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய வருமான வரி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஆண்டுக்கு 3 லட்சம் வரை வருமானம் இருந்தால் வரி செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு 3 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதோடு பழைய வருமான வரியில் எந்தவிதமான மாற்றமும் செய்யவில்லை. இந்நிலையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வருமானம் உள்ள சாமானியருக்கு 10% வரை வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வருடத்திற்கு 17,000 கோடி சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆன பிசிசிஐக்கு வரி விதிக்கப்படவில்லை. மேலும் இதனால் உழைக்கும் மக்களுக்கு எதிராக இந்த பட்ஜெட் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்