சமூக வலைதளங்களில் ஒரு பகீர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு மொபைல் போன் கடைக்கு வந்த சிறுவன் செய்த அஜாக்கிரதை செயல் பெரும் விபத்தில் முடிந்துள்ளது. அந்த சிறுவன் கடையில் இருந்த லித்தியம் (Lithium) பேட்டரியை எடுத்து தனது வாயில் வைத்து கடிக்கத் தொடங்கினான்.
பேட்டரியை அவன் கடித்த அடுத்த நொடியே, அழுத்தத்தின் காரணமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. சிறுவனின் வாயிலேயே நெருப்பு பிழம்பு பற்றியது.
🚨: A young man in India went to a mechanic to get his mobile phone battery replaced.
The mechanic removed the faulty battery, installed a new one, and handed the old battery to the young man.
The young man, while playing with the battery in his hand, suddenly bit it with his… pic.twitter.com/DNiZnFJwX9
— Ik_Lion 🦁 (@SajjadZ_056) February 5, 2026
இதைப் பார்த்த கடை உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்து போனார். பின் சுதாரித்துக்கொண்டு எரியும் பேட்டரியை அப்புறப்படுத்தினார். பலத்த காயமடைந்த அந்தச் சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லித்தியம்-அயன் பேட்டரிகள் அதிக ஆற்றலைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. அவற்றை கடிப்பது அல்லது ஊசி கொண்டு துளைப்பது போன்ற செயல்களைச் செய்யும்போது, உட்புறக் கட்டமைப்பு உடைந்து ‘தெர்மல் ரன்வே’ (Thermal Runaway) ஏற்பட்டு தீப்பிடிக்கவோ அல்லது வெடிக்கவோ வாய்ப்புள்ளது.
