
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுக்கான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய பிசிசிஐ ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைக்கலாம் என்று தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் வீரர்களுக்கான சம்பளத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை அணி நிர்வாகம் ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய பிசிசிஐ வீரர்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஐபிஎல் மெகா ஏலத்தில் தங்களை பதிவு செய்யாத வெளிநாட்டு வீரர்களுக்கு அடுத்த வருடம் நடைபெறும் மினி ஏலத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது.
அதாவது ஐபிஎல் மெகா ஏலத்திற்கு வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்யாத பட்சத்தில் அடுத்த வருடம் நடைபெறும் மினி ஏலத்தில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவார்கள். இதனையடுத்து ஐபிஎல் ஏலத்தில் வீரர்களை அணி நிர்வாகம் வாங்கிய பிறகு அவர்கள் போட்டிகளில் விளையாட முடியாது என்று கூறக்கூடாது. மேலும் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பிறகு வீரர்கள் கலந்து கொள்ள முடியாது என்று கூறினால் அவர்கள் அடுத்த 2 வருடத்திற்கு ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அதோடு ஏலத்தில் பங்கேற்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.