இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டங்களால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. தமிழகத்திலும் பலர் ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதா சட்டத்தை நிறைவேற்றியது. இந்நிலையில் நாடும் முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப கூடாது என தற்போது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் ஒளிபரப்புவதை உடனடியாக தடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்தவித விளம்பரங்களும் வெளியாகாமல் தடுக்க வேண்டும். ஏனெனில் ஆன்லைன் சூதாட்டங்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் சமூக மற்றும் நிதி பிரச்சனைகளை ஏற்படுகிறது. எனவே ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் ஒளிபரப்புவதை உடனடியாக தடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.