நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தற்போது ஏராளமான மக்கள் முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகளை போன்று தபால் நிலையங்களிலும் நல்ல வட்டி வருமானம் கிடைப்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் கணக்கு தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தபால் அலுவலகங்களில் ஒவ்வொரு வருடமும் வட்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் ஒரு தனிநபர் அல்லது கூட்டுக் கணக்கில் 4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாத காலாண்டில் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படும் நிலையில், வருமான வரி சட்டத்தின் படி 10,000 ரூபாய் வரை வட்டி தொகை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தபால் அலுவலக கணக்கில் குறைந்தபட்சம் 500 ரூபாய் இருப்பு தொகையாக இருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் விருப்பப்படும் நேரத்தில் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேலும் தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்குகள் என்பது ஒரு பாதுகாப்பான திட்டமாக இருப்பதால் அதில் முதலீடு செய்வது நல்ல பலனை தரும்.