இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்காக விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கடைசியாக 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். தற்போது 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் பெயரில்தான் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு போன்றவைகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட்டால் ஊழியர்களுக்கு 44 சதவீதம் வரை சம்பள உயர்வு ஏற்படும். தேர்தல் முடிவடைந்த பிறகு 2026-ல் எட்டாவது ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயாக இருக்கும் நிலையில், 8-வது ஊதிய குழு அமைக்கப்பட்டால் சம்பளம் 26,000 ரூபாயாக உயரும்.