தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா தேவராயன் கோட்டை வையச்சேரி அரசு கொள்முதல் நிலையங்கள் கடந்த வாரங்களாக செயல்பட தொடங்கி நெல் கொள்முதல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை குடோனுக்கு எடுத்து செல்வதற்கு தினசரி லாரிகள் சரிவர இயக்கப்படாத காரணத்தினால் வையச்சேரி கொள்முதல் நிலையத்தில் மட்டும் 4000 நெல் மூட்டைகளுக்கு மேல் இருப்பு உள்ளது. அதேபோல் தேவராயன் கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 5000 நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் பாதுகாப்பில்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் இட நெருக்கடியாக இருப்பதன் காரணமாக நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை இருப்பதாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து நெல் மூட்டைகள் தேக்கமடைந்திருப்பதால் விவசாயிகளிடமிருந்து தொடர்ந்து கொள்முதல் செய்யக்கூடிய நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு வைப்பதற்கு இடமில்லாமல் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.