மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் தனது மகன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து விட்டு வெளியே வரும் போது கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. பாபா சித்திக் இறப்பு சல்மான்கானை மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் பாபா சித்திக் கொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக ஷுபு லோங்கர் பேஸ்புக் பக்கத்திலிருந்து மிரட்டல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஷுபு லோங்கர் ஏற்கனவே பிஷ்னோய் கும்பலை சேர்ந்தவர். இவர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளார்.

எனவே இவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அவரது சகோதரர் பிரவீன் லோங்கர் பதிவிட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனை அடுத்து இவரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டதாவது, இந்தியாவில் தேடப்படும் முக்கியமான தீவிரவாதி தாவுத் இப்ராஹிம் தொடர்பில் இருந்தது,சல்மான் கானின் நெருங்கிய நண்பர் என்பதால் தான் பாபா சித்திக் கொல்லப்பட்டார். எங்களுக்கு யாரோடும் எந்த முன் விரோதமும் கிடையாது சல்மான் கானுக்கும், தாவுத்துக்கும் உதவி செய்பவர்கள் யார் இருந்தாலும் கவனமாக செயல்படும். இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிவை காவல்துறையினர் உண்மையா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு பாபா சித்திக் தனது வீட்டின் இப்தார் விருந்துக்கு அனைவரையும் அழைத்து இருந்தார். இதில் நடிகர் சாருக்கானுக்கும், நடிகர் சல்மான் கானுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை பாபா சித்திக் தீர்த்து வைத்துள்ளார். இதுபோன்று சென்ற ஆண்டும் நடிகர் சல்மான் கானுடன் அதிக நெருக்கத்தில் இருந்த இரண்டு நடிகர்கள் பிஷ்னோய் கும்பலால் தாக்கப்பட்டனர் என செய்திகள் வெளியாகின்றன. பாபா சித்திக்கின் கொலையை அடுத்து மும்பையின் தெற்கு பகுதியில் மலபார்ஹில்லில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நடிகர் சல்மான்கானுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.