மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் 3 பேரால் சுட்டு கொள்ளப்பட்டார். கொரோனா காலத்தில் இவர் செய்த மருத்துவ உதவிகள் காரணமாக மிகவும் புகழ் பெற்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் இவரை அரசியல் முன் விரோதம் காரணமாக சுட்டு கொள்ள பட்டிருப்பது தெரிய வந்தது.

மேலும் அவரை சுட்டுக்கொன்றதாக பிரபல தாதா கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய்க் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் உடன் பாபா சித்திக் தொடர்பு வைத்திருந்தார். ஆகவே அவரை சுட்டுக் கொன்றதாக அந்த கும்பல் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில் மும்பை காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் பாபா சித்திக்கை சுட்டுக்கொன்ற 2 பேர் பிடிபட்டதோடு அவர்கள் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலும் இவர்களில் வல்ஜித் சிங்கை காவல்துறையினர் 7 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மற்றொரு குற்றவாளியான தருமராஜ் ராஜேஷ் காஷ்யாய் சிறுவன் என்று அவரது வக்கீல் கோர்ட்டில் வாதித்ததால் அவரை உடல் எலும்பு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் அவர் சிறுவன் அல்ல என்பது உறுதியானது. இந்நிலையில் மராட்டிய மாநிலம் புனேயில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரவீன் கைது செய்யப்பட்டு அவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதில் முக்கிய குற்றவாளிகளில் தலைமறைவாகியுள்ள சிவக்குமார் என்பவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.