கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடைகளில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் நல அலுவலர் லட்சியவர்னா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மீன், இறைச்சி உள்ளிட்ட அனைத்து கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுகின்றனர்.

எனவே தினமும் கழிவுகளை சாலையில் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி வாகனங்களில் வருபவர்களிடம் குப்பைகளை கொடுக்க வேண்டும். கட்டாயமாக கடைகள் நடத்துபவர்கள் உரிமம் பெற்றிருக்க வேண்டும். அப்படி உரிமம் இல்லாமல் கடைகளை நடத்தினால் அபராதம் விதித்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.