திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் இலை சுருட்டு புழு உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகளுக்கு பொன்னேரியில் வைத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் வேதவள்ளி தலைமை தாங்கியுள்ளார்.

மேலும் வேளாண்மை இணை இயக்குனர் சுசிலா, வேளாண் விஞ்ஞானி சிவகாமி, வேளாண்மை அலுவலர் செல்வகுமார் முகாமில் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் ஜானகிராமன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.