பெங்களூரு கோரமங்கலாவில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் பார்ட்டியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த பெண் அதன் பிறகு ஆட்டோவில் பயணித்துள்ளார்.

பார்ட்டி முடிந்து அரை மயக்கத்தில் ஆட்டோவில் பயணித்த அந்த பெண்ணைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் தனது தோழிக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த தோழி அரை மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்து விட்டு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கொடுத்துள்ளனர்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோடு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.