
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது ஒரு மத்திய அரசாங்கத் திட்டமாகும், இதன் மூலம் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளும் ஆண்டுக்கு ரூ. 6,000 வரை குறைந்தபட்ச வருமான ஆதரவைப் பெறுவார்கள். இந்த தவணையை ஒரு வருடத்திற்கு மூன்று முறையாக ரூபாய் 2000 வழங்கப்படும். இந்தத் தவணை விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்களுக்கு நேரடியாக அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். இந்த வங்கி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பது முக்கியமானதாகும்.
இந்த நிலையில் மத்திய அரசு அடுத்த தவணையை வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அரசாங்கத்தால் எந்த ஒரு அதிகாரப்பூர் அறிவிப்பும் +வெளியிடப்படவில்லை. சென்ற முறை KYC மூலம் நில சரிபார்ப்பு முறை மேற்கொண்டதை போல் இந்த ஆண்டும் E_KYC மற்றும் நில சரிபார்ப்பு சோதனையை செய்து கொள்ள வேண்டும். இதனை இதுவரை செய்யாதவர்கள் இனி அரசின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.