டெபிட் கார்டு வாயிலாக எப்போது வேண்டும் என்றாலும் ATM இயந்திரத்திலிருந்து பணத்தை எடுக்கலாம். இதற்காக வங்கிக்கு போகவேண்டிய அவசியமில்லை. எனினும் ATMல் பணம் எடுக்கையில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக ATM இயந்திரத்தில் இருக்கும் “ரத்து” (Cancel) செய்யும் பட்டன் பற்றி நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

டெபிட்கார்டு வாயிலாக ஒவ்வொரு முறையும் ATMல் பணம் எடுத்த பின் ரத்து பொத்தானை அழுத்தவேண்டிய அவசியமில்லை. மேலும் உங்களது டெபிட்கார்டின் பின்னை டெபிட் கார்டில் எழுதக்கூடாது என ஆர்பிஐ மற்றும் வங்கிகள் அறிவுறுத்துகிறது. அதோடு நீங்கள் ATM இயந்திரத்திலிருந்து பணம் எடுக்கும் போதெல்லாம், உங்களது பின்னை யாரும் பார்க்கவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.