மத்திய அரசு ஊழியர்களுக்குரிய DA 4% உயர்த்தப்பட்டதை அடுத்து, ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை அரசாங்கம் நடப்பு ஆண்டு ஜூலையில் மேலும் 4 % உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. DA மற்றும் DR வருடத்திற்கு 2 முறை ஜனவரி மற்றும் ஜூலையில் திருத்தப்படும். ஜூலை மாதத்தில் DA உயர்வு பார்முலாவின் படி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு DA, ஓய்வூதியம் பெறுவோருக்கு டிஆர் வழங்கப்படுகிறது.

இப்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் தொழிலாளர் அமைச்சகம் DA கணக்கீட்டு பார்முலாவை 2016-ல் அகவிலைப்படியின் படி ஆண்டை மாற்றியது மற்றும் ஊதிய விகித குறியீட்டின் புது தொடரை (WRI-Wage Rate Index) வெளியிட்டது. டிஏ மற்றும் டிஆர்-ல் 4% உயர்த்தப்பட்டதன் வாயிலாக 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்கும். ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தின் படி DA வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, ஒரு அரசு ஊழியரின் மாதாந்திர சம்பளம் ரூபாய்.42,000 ஆகவும், அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆகவும் இருந்தால் பிறகு அகவிலைப்படியாக ரூ.9,690 பெறவேண்டும். தற்போது சமீபத்திய 4% டிஏ உயர்வுக்கு பின் இந்த டிஏ தொகை ரூ.10,710 ஆக அதிகரிக்கும். ஆகவே மாத சம்பளம் ரூ.1,020 உயர்த்தப்படும். அகில இந்திய அளவில் 12 மாத சராசரியின் சதவீத அதிகரிப்பின் அடிப்படையில், 4 சதவீத புள்ளிகள் அதிகரித்து 38 சதவீதமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. விலைவாசி உயர்வை ஈடுசெய்ய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA வழங்கப்படுகிறது.