பொதுவாகவே ஏடிஎம்மிலிருந்து பணம் தான் எடுப்போம். ஆனால் அமெரிக்காவில் ATM-ல் பணம் எடுப்பதைப் போன்றே, அதிலிருந்து துப்பாக்கி குண்டுகளை உடனடியாக பெறக் கூடிய வகையில் மளிகை கடைகளில் பிரத்யேக ATM இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக இது அலபாமா, ஒக்லாஹோமா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதை பல இடங்களிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ATM மிஷினில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அடையாள அட்டையை காண்பித்து, அதற்க்கான உரிய பணத்தை செலுத்தி தேவையான குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.