அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் தற்போதிலிருந்தே அதற்காக களமிறங்கும் வேட்பாளர்களுக்கான களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக குடியரசு கட்சியில் டிரம்ப்க்கு எதிராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இவர் ஏற்கனவே கரோலினாவின் ஆளுநராக இரண்டு முறை பதவி வகித்தவர் ஆவார்.

இந்த நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது “கொரோனா சீனாவின் ஆய்வகத்தில் இருந்து வந்திருக்கலாம். எனவே அமெரிக்கா சீனாவுக்கான உதவியை உடனடியாக நிறுத்த வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.