தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். லியோ படம் ரிலீசுக்கு முன்பாகவே 400 கோடி ரூபாய் வரை விற்பனையானதாக கூறப்படுகிறது.

தற்போது நடிகர் விஜய் 120 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெரும் நிலையில் தன்னுடைய 68-வது படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் விஜயின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் நிலையில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் லியோ படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிக்கு விற்பனையானதால் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்க்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.