லூனர் புத்தாண்டு முன்னிட்டு ஹாங்காங்கில் நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் R என்ற ஒரே ஒரு வார்த்தை மட்டுமே கொண்ட நம்பர் பிளேட் 27 கோடி ரூபாய்க்கு விலை போனதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது. 27 கோடி ரூபாய் என்பதெல்லாம் இரண்டாவது பெரிய விற்பனை தொகையாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு w என்ற ஒரே ஒரு எழுத்தினை மட்டுமே கொண்ட நம்பர் பிளேட் 27.3 கோடி ரூபாய்க்கு விலை போனது. மேலும் தனிப்பட்ட நம்பர் பிளேட்டுகளை ஏலம் விடும் முறை 2006 ஆம் ஆண்டு தொடங்கியது.

அதிலிருந்து இன்று வரை 160 ஏலங்கள் நடத்தி 40,000 நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்துள்ளதாகவும் இதன் மூலம் 632.2 கோடி ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உலகில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட வாகன பிளேட்டுகளின் பட்டியல் பற்றி பார்ப்போம். MM – 188 கோடி, f1 – 154 கோடி, T5 74 கோடி, AA 8 72 கோடி, 1 – 73 கோடி, 9- 51 கோடி, 7 – 30கோடி என வாகன நம்பர் பிளேட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.