உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி உரிமையாளர் ஆனதை தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக தான் தொடர வேண்டுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு 57 சதவீதம் பேர் எலான் மஸ்க் தலைமைச் செயலாளர் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இதை அடுத்து புதிய தலைமைச் செயலர் அதிகாரியை தேடும் பணியில் எலான் மஸ்க் ஈடுபட்டார். அதன்படி புதிய தலைமைச் செயல் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆனால் அது ஒரு மனிதர் அல்ல. அது வளர்ப்பு நாயான பிளாக்கி எனும் செல்லப்பிராணியை ட்விட்டரின் புதிய சி.இ.ஓ-ஆக எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றை எலான் மஸ்க் பகிர்ந்துள்ளார். அதில் சிஇஓ சேரில் அவரின் வளர்ப்பு நாய் அமர்ந்திருக்கும் காட்சியும் அதற்கு ட்விட்டர் நிறுவனத்தின் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்தபடி சிஇஓ என்று எழுதப்பட்டுள்ளது. புகைப்படத்தை வெளியிட்டு ட்விட்டரின் புதிய சிஈஓவை பார்த்து ஆச்சரியம் ஏற்படுகின்றது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.