செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேர்தலுக்கு முன்னாடி கொடுத்த வாக்குறுதிகள் வேறு, ஜெயிச்சி ஆட்சிக்கு வந்த பிறகு திமுகவின் நிலைப்பாடு வேறு. எதற்கெடுத்தாலும் பல ஆர்ப்பாட்டங்கள், எதற்கெடுத்தாலும் போராட்டம். நேற்று கூட நீங்க பார்த்திருப்பீங்க…  தலைமை கழகத்தில் 2013 பட்டதாரி ஆசிரியர்கள் வந்து தஞ்சம் கொடுங்க என கட்சி ஆபிஸ்_ஸூக்கு  வந்து ஹெல்ப் கேட்டாங்க.

கோயம்பேடுல அவங்க போராட்டம் நடத்துவதற்காக வந்தாங்க… காவல்துறை அவர்களை  கலைந்து செல்ல சொன்ன உடனே,  அவங்க எங்க போறதுன்னு தெரியலை..? என்னா.. நைட் டைம் ஆயிடுச்சு. எல்லாரும் முன் அனுமதி இல்லாமல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அவர்களாகவே வந்து தஞ்சம் அடைந்து விட்டார்கள். இங்கே இருக்கின்ற நம் ஆஃபீஸ் நிர்வாகிகள் எனக்கு போன் பண்ணி சொல்லும்போது,  கேக்குறாங்க… இந்த மாதிரி எல்லாரும் வந்திருக்கிறார்கள். ஒரு 300 – 400 பேரு.

நான் கேட்டேன்..  முன் அனுமதியே  பெறவில்லையே அப்பறோம் எப்படி வந்தார்கள் ? என்று நான் கேட்டேன். அப்போ அவங்க சொன்னாங்க…  கேப்டன் உடைய அலுவலகம் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் வந்தோம் என்று சொன்னார்கள். அவங்க எல்லாம் யாரு ? பட்டதாரி ஆசிரியர்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இந்த அரசினுடைய கடமை , காவல்துறையின் கடமை.

ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனால் அத்தனை பேரும் இங்கு வந்தார்கள். கேப்டனை பொறுத்த வரைக்கும்…  என்னை பொறுத்த வரைக்கும்,  நம் நம்பி வந்தவர்களை நிச்சயமாக உரிய பாதுகாப்பு கொடுத்து,  அவர்களுக்கு வேண்டிய உணவு அளித்து பத்திரமாக நாங்கள் திருப்பி அனுப்பினோம். ஏன் இதை நான் சொல்றேன் ? அப்படின்னா… ஒரு ஆட்சி என்பது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றனும், பாதுகாப்பு கொடுக்கணும், எல்லாத்தையும் செய்யணும் என தெரிவித்தார்.