ஒவ்வொரு வருடமும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனை சிறப்பை போற்றும் விதமாக ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சங்ககாலத்தில் வாழ்வில் ஓரி மன்னன் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையை ஆட்சி செய்ததன் காரணமாக ஒவ்வொரு வருடமும் அந்த மன்னனை போற்றும் விதமாக மாபெரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் இந்த திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற இருப்பதால் எந்த அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் அம்மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பு  மதுபானங்கள் விற்பனை செய்தால் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.