விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள்.

கடல் பயண வாய்ப்புகள் கைகூடும் அதற்கான வாய்ப்புகள் அமையும். ஆதாயம் சீராக இருக்கும். இன்று நல்லதொரு காரியம் ஒன்றில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கூடும். எதிர்பார்த்த லாபம் தாமதப்பட்டாலும் வந்துச்சேரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவலாக இருக்கும். எதிர்பார்த்த பணம் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத் தேவைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.

செலவினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமுடன் இருக்கவேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்துங்கள். இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவ மாணவியர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.