கும்பம் ராசி அன்பர்களே..!
எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும்.

உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அனைத்து வகையிலும் ஆதரவு கிடைக்கும். கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம்.

புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கல்வியினால் அனைத்து விஷயத்திலும் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் கருநீல நிறம்.