மீனம் ராசி அன்பர்களே..!
இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும்.

குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். செலவினை கட்டுப்படுத்த பாருங்கள். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் முன்னேற்றம் காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.