மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று வியாபாரத்தில் தனலாபம் அதிகரித்து செல்வாக்கு உயரும்.
அனைவரிடமிருந்தும் ஆதரவு பெருகும். குடும்பத்தார் உங்களை மதித்து நடக்கக்கூடும். உங்களுடைய பேச்சுக்கு அவர்கள் கட்டுப்படுவார்கள். இன்று அனைத்து விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுமையை பாதுகாக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். நல்ல முன்னேற்றமான அமைப்புகளும் உண்டாகும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா நிறம்.